Friday, September 29, 2017

கணவன் தன்னுடைய 2வது மனைவியை தன்னோடு சேர்த்து வாழ மனு தாக்கல் செய்ய முடியாது.

முதல் மனைவி உயிரோடிருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் தன்னுடைய 2வது மனைவியை தன்னோடு சேர்த்து வாழ (Restitition Conjugal Rights) உத்தரவிடும் படி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு செய்யப்பட்ட திருமணம் இந்து திருமணச் சட்டம் பிரிவு 5ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு முரணானதாகும். இந்து திருமணச் சட்டம் பிரிவு 11ன் படி அத்தகைய திருமணங்கள் சட்டப்படி செல்லாத திருமணமாகும். எனவே 2வதாக திருமணம் செய்து கொள்கிற போது முதல் மனைவி உயிரோடு இருந்தால் 2வதாக திருமணம் செய்து கொண்ட மனைவியின் மீது இந்து திருமணச் சட்டம் பிரிவு 9 அல்லது 13 ன் கீழ் கணவர் எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்ய முடியாது

Talk to the Leading Divorce Lawyer in Chennai @ 9551716256

No comments:

Post a Comment